சுவாமிமலை முருகன் கோயிலுக்கு லிப்ட் வசதி கேட்ட ஜவாஹிருல்லா!

சுவாமிமலை முருகன் கோயிலுக்கு லிப்ட் வசதி கேட்ட ஜவாஹிருல்லா!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா இன்று பேசுகையில், ''முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமி மலை முருகன் திருக்கோயில் எனது தொகுதியான பாபநாசத்தில் உள்ளது. இங்கு சமீபத்தில் நான் ஆய்விக்கு சென்ற போது வயதானவர்கள், மூட்டுவலி உடையவர்கள் படிகளில் ஏறிச் சென்று தரிசனம் செய்ய சிரமப்பட்டார்கள். எனவே, சுவாமிமலை முருகன் கோயிலுக்கு மின்தூக்கி (லிப்ட்) அமைத்து தர அமைச்சர் முன்வருவாரா" என்று வினா எழுப்பினார்.

இதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துப் பேசுகையில், " கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையின்படி, சுவாமிமலை முருகன் கோயிலில் தங்கும் விடுதிக்கு ஒப்பந்தம் அறிவித்து விடுதி கட்டுவதற்கான பணிகளை முதல்வர் துவக்கி வைக்க உள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 5 திருக்கோயில்களில் மின்தூக்கி(லிப்ட்) அமைப்போம் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த எண்ணிக்கை 7-ஐ தாண்டியுள்ளது. கேட்டதெல்லாம் தருகின்ற அரசு இது. எனவே, சுவாமிமலை முருகன் கோயிலில் கள ஆய்வு மேற்கொண்டு அதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் நிறைவேற்றித் தரப்படும்'' என்று பதில் அளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in