1,627 கோடியை ஒதுக்கியது ஜப்பான் நிறுவனம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விடிவுகாலம்

1,627 கோடியை ஒதுக்கியது ஜப்பான் நிறுவனம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விடிவுகாலம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு ஜப்பானின் ஜெய்கா நிறுவனம் முதற்கட்டமாக 1,627 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் தோப்பூரில் 1,977 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 படுக்கை வசதிகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி அன்று மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 11 மாதங்கள் கழித்து 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ம் அன்று ரூ.15 கோடி செலவில் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. மதுரை மக்கள் மட்டுமல்ல, தென் தமிழக மக்கள் அனைவரும் தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறப்போவதாக மகிழ்ந்தார்கள்.

ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும் அடிக்கல் நாட்டிய இடத்தில் சுற்றுச் சுவர் மட்டும் எழுப்பப்பட்டு, கட்டுமான வேலைகள் எதுவும் தொடங்கப்படாமல் இன்று வரை பரிதாபமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்லின்போது எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்ட ஒற்றை செங்கல் என்ற குறியீடு பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார் உதயநிதி ஸ்டாலின். அடிக்கல் நாட்டி ஒன்றரை ஆண்டுகள் கழித்து ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்திடம் கடன் ஒப்பந்தம் கையெழுத்தான பின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

2020 டிசம்பரில் அப்போதைய அ.தி.மு.க அரசு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை ஒப்படைக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியது. பின்னர், மத்திய அரசிடம் நிலம் ஒப்படைக்கப்பட்டது. எய்ம்ஸ் கட்டுமான வேலை இந்த ஆண்டாவது தொடங்குமா என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், மருத்துவமனை கட்டுப்பான பணிக்கான நிதியை ஐப்பான் நிறுவனம் இன்று ஒதுக்கியுள்ளது. திட்ட மதிப்பான 1,977 கோடியில் முதற்கட்டமாக 1,627 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனை மதுரை எம்பி சு.வெங்கடேசனும் உறுதி செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மதுரை எய்ம்ஸ் பற்றி நாடாளுமன்றத்தில் விதி 377ன் கீழ் நான் எழுப்பிய பிரச்சினைக்கு அமைச்சர் அளித்த பதிலை குறிப்பிட்டுள்ளதோடு, மொத்த தேவையான 1977.80 கோடிகளில் ஜெய்கா கடன் ரூ.1627.7 கோடி. மீதம் பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும். 92 சதவீத முன் முதலீட்டு பணி நிறைவு. 2026 அக்டோபரில் பணிகள் முடிவுறும் என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in