புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு... புகுந்து புறப்பட்ட காளைகள்!

களைகட்டிய புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு...
களைகட்டிய புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு...

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே புகையிலைபட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள் பெங்கேற்றுள்ளன. இவற்றை அடக்க 450 மாடுபிடி வீரர்களும் களத்தில் நிற்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா சாணார்பட்டி அருகே உள்ள புகையிலைப்பட்டியில், புனித சந்தியாகப்பர் புனித செபஸ்தியார் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு ஆண்டுதோறும் இங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.

புகையிலைப்பட்டியிலில் ஜல்லிக்கட்டு போட்டி
புகையிலைப்பட்டியிலில் ஜல்லிக்கட்டு போட்டி

இந்தப் போட்டியில் பங்குபெறுவதற்காக திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டுவரப்பட்டன. இவற்றுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்பு தகுதியான காளைகள் மட்டும் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டன.

இதேபோல், ஆன்லைனில் பதிவு செய்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொரு குழுவாக போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். ஒரு குழுவிற்கு 30 பேர் வீதம் போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்றைய போட்டியில் 650 காளைகள் பங்குபெறுகின்றன. 450 மாடுபிடி வீரர்கள் களத்தில் நிற்கின்றனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கு, பீரோ, கட்டில், தங்கக்காசு, வெள்ளிக்காசு, எவர்சில்வர் அண்டா, குத்து விளக்கு, சைக்கிள், பிளாஸ்டிக் சேர், பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி, முந்நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் புகையிலைப்பட்டியில் குவிந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!

பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!

கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!

அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in