மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு ஜாக்பாட்!: தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு ஜாக்பாட்!:  தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

"தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்" என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கையின் மீது இன்று விவாதம் நடைபெற்றது. இத்துறைகளுக்கான அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், " தற்போது தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும். விவசாய உற்பத்தியினைப் பெருக்கவும், விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறப்பு முன்னுரிமையில் உள்ள விவசாய விண்ணப்பத்தாரர்களுக்கு இந்த இலவச மின் இணைப்பு வழங்கப்படும்" என்றார்.

மேலும்," ரூ. 1,649 கோடியில் 100 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள், சாலையோர துணைமின் நிலையங்களில் நிறுவப்படும்" என்றும் தெரிவித்தார்.

"தமிழகத்தில் டாஸ்மாக் சில்லறை விற்பனைப் பணியாளர்களுக்கு 2022 ஏப்ரல் முதல் ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும். இப்படி 24 ஆயிரத்து 805 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் ரூ.18.87 கோடி கூடுதல் செலவாகும்" என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Related Stories

No stories found.