இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர்
இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர்

தமிழக அரசு அளித்த உறுதிமொழி: இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்

எங்களது கோரிக்கைகளை மூன்று மாதத்திற்குள் நிறைவேற்றித் தருவதாக அரசு உறுதியளித்துள்ளதாலும், மாணவர்களின் நலன் கருதியும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஒரு வாரத்துக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்களும் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த போராட்டத்தின் போது 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பின் அறிக்கை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்களின் கோரிக்கைக் குறித்து ஆராய குழு அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து போராடி வந்த சில ஆசிரியர்கள் சங்கம் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்த நிலையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இன்றைய தினம் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள், தங்களின் உண்ணாவிரதப்போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

போராட்டத்தை வாபஸ் பெறச்சொல்லி யாரும் மிரட்டவில்லை என்றும் எங்களின் கோரிக்கைகளை 3 மாதத்தில் நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுள்ளதாகவும் மிக முக்கியமாக மாணவர்களின் நலன் கருதியும் இந்த போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக கூறினர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்

விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

கவின் திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in