ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை: அடுத்தக்கட்டத்தில் கோடநாடு வழக்கு

ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை: அடுத்தக்கட்டத்தில் கோடநாடு வழக்கு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் கடந்த அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை நடந்தது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்ததால் இந்த வழக்கில் சந்தேகம் வலுத்தது. கடந்த ஆட்சியில் பெயரளவுக்கு விசாரணை நடத்தப்பட்டு வழக்கும் முடிவுக்கு வந்தது.

இதனிடையே, திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் கோடநாடு வழக்கை கையில் எடுத்துள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் அண்மையில் தனிப்படை காவல் துறையினர் 2 நாட்களாக விசாரணை நடத்தினர். அப்போது, அவரிடம் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் இதற்கு அவர் பதில் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதனிடையே, கோடநாடு வழக்கில் பூங்குன்றனை தனிப்படை காவல் துறையினர் முதல்முறையாக விசாரணைக்கு அழைத்திருந்தனர். அதன்படி இன்று தனிப்படை காவல் துறையில் பூங்குன்றன் ஆஜரானார். கோவை காவலர் பயிற்சி பள்ளியில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 15 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக பூங்குன்றன் இருந்துள்ளார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in