தொலைக்காட்சிக்கு "பிக்பாஸ்": கிளப்ஹவுஸுக்கு "SSS"

தொலைக்காட்சிக்கு "பிக்பாஸ்": கிளப்ஹவுஸுக்கு "SSS"

‘கிளப்ஹவுஸ்’ என்கிற அரட்டைச் செயலி சமீப நாட்களில் பிரபலமடைந்துவருகிறது. இச்செயலியில் அரசியல், சமூகம், சினிமா, தொழில் தொடங்கி அனைத்து வகையான விஷயங்களும் பேசப்பட்டுவருகிறது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில், குரல் வாயிலாக உரையாடிக்கொள்வதற்கான வசதி இச்சமூகவலைத்தள செயலியின் சிறப்பம்சமாகும்.

தற்போது இந்தியா உள்படப் பல நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான பயனர்களை இச்செயலி பெற்றுவருகிறது.

குரல்வழி உரையாடலின் மூலமாகப் பயனாளர்கள் இடையே நேரடிப் பிணைப்பை உருவாக்குவதே ‘கிளப்ஹவுஸி’ன் நோக்கமாகவுள்ளது.

சுரேகா சுந்தர்
சுரேகா சுந்தர்

அந்தவகையில் எழுத்தாளரும், பேச்சாளருமான சுரேகா சுந்தர் ‘SSS’ என்ற கிளப்ஹவுஸ் அறையில் காலை 5.55 முதல் 6.55வரை நாள்தோறும் ஒரு தலைப்பில் ஒரு மணிநேரம் நிகழ்ச்சி நடத்துகிறார்.முதல் 45 நிமிடங்கள் சுரேகா சுந்தர் பேசியும், அடுத்த 15 நிமிடங்கள் உலங்கெங்கும் வாழும் 300-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பேசவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

வாரத்தின் ஏழு நாட்களும் திறமைத்திங்கள், செய்தி செவ்வாய், புத்தக புதன், வியாபார வியாழன், வெற்றி வெள்ளி, சரித்திர சனி, ஞான ஞாயிறு என்ற தலைப்பில் பிரிக்கப்பட்டு இந்நிகழ்சி நடந்து வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் அருகே 75 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு நகரம் வெப்ப மயமாவதைத் தடுக்கவும், குளிர்ச்சியை எப்போதும் தக்கவைத்திடவும், மனிதர்கள் அப்பகுதியில் நுழையத் தடை செய்யப்பட்டு, புங்கை மரங்களை(Indian beech tree) வளர்க்கத் திட்டமிட்டுள்ளதாக இந்த அறையில் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்த தோட்டக்கலைத்துறை மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, "கிராமங்களில் சாலை ஓரம், பொது இடங்களில் புங்க மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார் அமைச்சர்.

'SSS' கிளப்ஹவுஸ் ரூமில் 11-ம் தேதி காலை ராஜாராஜ சோழன் வரலாறு குறித்துப் பேசப்பட்டபோது, வருகின்ற 16-ம் தேதி 100-வது நாளை இந்த குழு எட்டுவதால் அன்றுடன் இந்நிகழ்ச்சியின் 'சீஸன்-1' முடிவுக்கு வருகிறது. 'சீஸன்-2' குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று சுரேகா சுந்தர் அறிவித்தார்.

தொலைக்காட்சியில் “பிக்பாஸ்” என்றால் கிளப்ஹவுஸில் “SSS” என்றால் மிகையாகாது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in