கால்நடைப் பராமரிப்புத் துறையில்  வேலைவாய்ப்பு என்ற தகவல் போலியானது: பெரம்பலூர் ஆட்சியர் தகவல்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா

கால்நடைப் பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு என்ற தகவல் போலியானது: பெரம்பலூர் ஆட்சியர் தகவல்

கால்நடைப் பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு குறித்து வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவிவரும் தகவல் போலியானது என்றும், அந்த அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறையில் 90 மணி நேரப் பயிற்சி அளித்து, ரூ.15,000 - ரூ.18,000 வரையிலான ஊதியத்தில் ஆள் சேர்ப்பு நடைபெறுவதாகவும், இதற்கான பணி நியமன ஆணைகள் ஜுன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் சமூக ஊடகங்கள் வழியாக தகவல் பரவி வருகிறது.

மேலும், ஆர்வமுள்ளவர்கள் உடனடியாகப் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கால்நடைப் பராமரிப்புத் துறைக்குத் தொடர்பில்லாத அந்தத் தவறான தகவலை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற தகவல்களைப் பகிரும் நபர்கள் குறித்து மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு 94431 91716 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in