பூண்டி ஏரி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நீர் வரத்து 10,000 கன அடியாக உயர்வு
பூண்டி ஏரி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை பூண்டி ஏரியில்  உபரி நீர் திறப்பு இன்று காலை 8 மணி முதல் 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை பூண்டியில் உள்ள  சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் சென்னையின் குடிநீர் தேவையை போக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏரிக்கு  தொடர்ந்து அதிக நீர் வரத்து அதிகரித்ததால் வெகு சீக்கிரமே ஏரி நிரம்பியது. அதனால் கடந்த மாதத்தில் இருந்தே  ஏரிக்கு வரும் நீர்  முழுவதும் உபரி நீராக தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக சென்னையை  சுற்றிலும் பெய்து வந்த கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு  நீர்வரத்து உயர்ந்தது.  அதன் விளைவாக ஏரியில்  இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5000 கனஅடியாக உயர்த்தப்பட்டிருந்தது.  இந்த நிலையில் நேற்று ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு  வரும் நீரின் அளவு 10,000 கன அடியாக  உயர்ந்துள்ளது.  அதையடுத்து இன்று காலை 8 மணி முதல் ஏரியில்  இருந்து திறக்கப்படும்  உபரி நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படுகிறது. இதனால் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in