தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 24 இடங்கள் பயனற்றுக் கிடப்பதா?

அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில்
24  இடங்கள் பயனற்றுக் கிடப்பதா?

தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட 24 இடங்கள் நிரப்படவில்லை என்பதால், அந்த முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட 812 இடங்களில் 24 இடங்கள் நிரப்பப்படவில்லை. அந்த இடங்களை தமிழக அரசும் நிரப்ப முடியாது என்பதால் அவை யாருக்கும் பயன்படாது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு மருத்துவ இடத்திற்கும் சுமார் ஒரு கோடி செலவிடப்படுகிறது. மருத்துவப் படிப்பில் சேர ஆயிரக்கணக்கான மாணவர்கள் காத்துக் கிடக்கின்றனர். இத்தகைய சூழலில் தவறான கொள்கைகளால் விலைமதிப்பற்ற 24 மருத்துவ இடங்கள் பயனற்றுக் கிடப்பதை ஏற்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in