வெயிலால் தகிக்கும் தமிழ்நாடு... டாப் லிஸ்டில் ஈரோடு!

வெயில்
வெயில்
Updated on
2 min read

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 15 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 108.8 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 15 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 108.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. திருப்பத்தூரில் 107.6, சேலத்தில் 106.8, வேலூரில் 106.7 டிகிரி ஃபாரன்ஹீட்டும் பதிவானது. கரூர் பரமத்தியில் 105.8, தருமபுரியில் 104. 9, திருச்சியில் 104.54 டிகிரி ஃபாரன்ஹீட்டும் பதிவானது.

வெயில்
வெயில்

மதுரை விமான நிலையம் பகுதியில் 104.3, திருத்தணியில் 104.18, மதுரை நகர் மற்றும் தஞ்சை பகுதிகளில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டும் பதிவானது. கோவையில் 103.64, நாமக்கல்லில் 102.2, சென்னை மீனம்பாக்கத்தில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானது.

இந்நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு, வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 39 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மே 2 மற்றும் 3-ம் தேதிகளில் வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் , சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மூன்று நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழை
மழை

இதற்கிடையே, ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடுக்கு சென்ற முன்னாள் ராணுவ வீரர் சத்யாவின் 14 வயது மகன் அர்ஷன், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. வெயிலின் கொடுமையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in