பொங்கல் பரிசு தொகுப்பு : 2 திமுக அமைச்சர்களுக்கு நோட்டீஸ்!

உயர் நீதிமன்றம் அனுப்பியது
பொங்கல் பரிசு தொகுப்பு : 2 திமுக அமைச்சர்களுக்கு நோட்டீஸ்!

தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அமைச்சர்கள் அர.சக்கரபாணி, ஐ.பெரியசாமி ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வெல்லம், பச்சரிசி, புளி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ‛பொங்கல் பரிசு தொகுப்பை' தமிழக அரசு வழங்கியது. இதில், சில இடங்களில் பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதனிடையே தரமற்ற பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கியது தொடர்பாக திருவள்ளூரைச் சேர்ந்த ஜெயகோபி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை ஜூன் 10- ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in