
``ஜிஎஸ்டி வந்த பிறகு மாநில அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது'' என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், பன்முகப் பண்பாட்டை பாசிய சச்திகள் அழிக்க முயலும் வேளையில் அதை முறியடிக்கும் கடமை அரசுக்கு உண்டு. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். மாநிலத்தின் உரிமைகளுக்காக இந்த அரசு தொடர்ந்து போராடும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மூலம் வறுமையை ஒழிப்பதே அரசின் நோக்கமாகும். முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறை முடிவுக்கு வந்தபின் 20 ஆயிரம் கோடி வரி இழப்பை தமிழகம் சந்திக்கும். ஜிஎஸ்டி வந்தபிறகு மாநில அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டினார்.