'கலைஞர் உயிரோடு இருந்திருந்தால்…' : நடிகர் சிவகுமார் உருக்கமான பேச்சு!

'கலைஞர் உயிரோடு இருந்திருந்தால்…' : நடிகர் சிவகுமார் உருக்கமான பேச்சு!

"சென்னையில் வள்ளுவர் கோட்டத்தையும், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலையையும் வைத்ததற்காக முத்தமிழறிஞர் கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் அவரது பாதத்தைத் தொட்டு வணங்குவேன்" என நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'தீராக்காதல் திருக்குறள்' திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வரைந்த ஓவியக் கண்காட்சியை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தகவல் தொழில்நுட்பத்துறை மனோ தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தமிழகம் முழுவதும் இருந்து 12 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட ஓவியப்போட்டியில் 365 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடிகர் சிவகுமார் எழுதிய 'திருக்குறள்-50' என்ற நூல் வெளியிடப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இவ்விழாவில் நடிகர் சிவகுமார் பேசுகையில், “முத்தமிழறிஞர் கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் அவரின் பாதத்தைத் தொட்டு வணங்குவேன். ஏனெனில் அவர்தான் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தையும், கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலையையும் வைத்தவர்" என்று கூறினார். விழாவில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in