நான் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா ஆட்சியை தருவேன்!: சொல்கிறார் சசிகலா

நான் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா ஆட்சியை தருவேன்!: சொல்கிறார் சசிகலா

"ஜெயலலிதா ஆட்சியில் எந்தகுறையும் இருந்தது கிடையாது. அதேபோன்ற ஆட்சியை கொடுக்க விரும்புகிறேன்" என்று சசிகலா கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு ஆன்மிக பயணம் செய்து வரும் சசிகலா, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது 5 அடி உயர வெண்கல வேலினை கோயிலிலுக்கு காணிக்கையாக செலுத்தினார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," திமுகவின் ஓராண்டு ஆட்சி மக்களுக்கு வெறுப்பைக் கொடுத்திருக்கிறது. திமுக ஆட்சியில் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடைபெறுகிறது. அத்துடன் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது" என்று கூறிய அவர், விரைவில் அரசியல் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஓராண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் அரசு அதிகாரிகள் திமுகவினருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் எந்தகுறையும் இருந்தது கிடையாது. அதேபோன்ற ஆட்சியை கொடுக்க விரும்புகிறேன்" என்றார்.

Related Stories

No stories found.