எனக்கு இந்தி தெரியாது... உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
Updated on
2 min read

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தனக்கு இந்தி தெரியாது என கூறியுள்ளார்.

புதிய குற்றவியல் சட்டங்கள்
புதிய குற்றவியல் சட்டங்கள்

இந்தியாவின் குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் மத்திய அரசின் 3 புதிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. குற்றவியல் சட்டங்களான ஐபிசி, சிஆர்பிசி, ஐஇசி ஆகிய சட்டங்களுக்கு பதிலாக பாரதீய நியாயா, பாரதிய நகரிக் சுரக்ஷா ஆகிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றி, அவற்றின் மூலம் இந்தியை மத்திய அரசு திணிப்பதாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும், புதிய சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் போலீஸ் வன்முறையை ஆதரிக்கிறது என்ற பகிரங்க குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நேற்று வழக்கறிஞர்களிடம், தான் வழக்கு விசாரணை மேற்கொள்ளும் போது இந்திய தண்டனை சட்டங்களை ஐபிசி, சிஆர்பிசி என்ற கூறுமாறு கேட்டுக் கொண்டார். ஏனெனில் புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டங்களின் பெயர்கள் இந்தியில் உள்ளன. தனக்கு இந்தி தெரியாது என்பதால், தான் அதனை பழைய பெயர்களிலேயே அழைப்பதாகவும் தெரிவித்தார். நேற்று ஒரு வழக்கு விசாரணையின் போது, அவர் தண்டனை சட்டப்பிரிவு குறித்து கேட்டு தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இது விசாரணை நேரத்தை எடுத்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...


நாளை தைப்பூசம்... இப்படி வணங்கினால் வாழ்வின் சிக்கல்கள் தீரும்!

பட்ஜெட் 2024: வீட்டுக்கடனில் அதிரடி மாற்றம்... எகிறும் எதிர்பார்ப்புகள்... என்னென்ன மாற்றங்கள்?!

ஏளனமா பேசுனவங்க முன்னாடி வாழ்ந்து காட்டிட்டோம்! காதல் ஜோடியின் தன்னம்பிக்கை கதை!

அடுத்த வியூகம்... போயஸ் கார்டனில் குடியேறுகிறார் சசிகலா... ’வேதா இல்லம்’ எதிரே... புது பங்களாவில் இன்று கிரகப்பிரவேசம்!

நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் தொடர் விடுமுறை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in