`ஜெயலலிதாவை கண்ணாடி வழியாகத்தான் 2 முறை பார்த்தேன்'

ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி வாக்குமூலம்
`ஜெயலலிதாவை கண்ணாடி வழியாகத்தான் 2 முறை பார்த்தேன்'

"மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற வந்த ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக இரண்டு முறை மட்டுமே பார்த்துள்ளேன்" என ஆறுமுசாமி ஆணையத்தில் இளவரசி வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் வழங்கப்பட்டது. கடந்த 4 வருடங்களில் ஆறுமுகசாமி ஆணையம் ஓ.பன்னீர் செல்வத்துக்கு 8 முறை சம்மன் வழங்கியது. ஆனால் ஓ.பன்னீர் செல்வம் ஆணையம் முன்பு ஆஜராகாத நிலையில் இன்று காலை ஓ.பன்னீர் செல்வம், இளவரசி ஆகியோர் ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

அதன்படி இளவரசி அளித்த வாக்குமூலத்தில், அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஓரிரு முறை மட்டுமே அவரை பார்த்ததாகவும், அதுவும் கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன். கடந்த 1992-ம் ஆண்டு சசிகலா மூலம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் அறிமுகம் ஏற்பட்டது. போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தங்கி இருந்தாலும், என்னிடம் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து எதுவும் பகிர்ந்தது இல்லை. ஆனால் வீடு, குடும்பம் தொடர்பாக மட்டும் பேசுவார்" என கூறியுள்ளார்.

மேலும், கடந்த 2014-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சிறைக்கு சென்றேன். அப்போது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். 2016 தேர்தலின் போதும் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது சசிகலா மட்டுமே அவருடன் இருந்து பார்த்துக்கொண்டார். நான் தினமும் சென்று பார்த்து வருவேன். 75 நாளில் ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவை பார்த்திருக்கிறேன். அதுவும் கண்ணாடி வழியாகத்தான்" என வாக்குமூலம் அளித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in