`எனக்கு இந்த விருது வேண்டாம்'-மேடையில் அதிர்ச்சி கிளப்பிய பெண் காவல் அதிகாரி!

சிறைத்துறை விருதுகள்
சிறைத்துறை விருதுகள்

``சிறை அதிகாரிகளுக்கான அடிப்படை சிறப்புப் பயிற்சி நிறைவு விழாவில் தனக்குக் கிடைக்க வேண்டிய விருது கிடைக்க வில்லை, இதனால் நீங்கள் கொடுக்கும் இந்த விருது எனக்கு வேண்டாம்'' என தனக்கு வழங்கப்பட்ட விருதை அவர் வாங்க மறுத்து திரும்பியதால் காவல்துறை உயர் அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

சுர்பி ஹோடா
சுர்பி ஹோடா

வேலூர் மாவட்டம் , வேலூர் தொரப்பாடியில் உள்ள சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சிறைக் காவலர்களுக்கான பயிற்சி மையத்தில் சிறைத்துறை அதிகாரிகளுக்கான 27-வது பேட்ஜ் பிரிவு 9 மாத கால அடிப்படை பயிற்சிகள் நடைபெற்றது. இதில், துணைக் கண்காணிப்பாளர்கள், துணை ஜெயிலர்கள், ஆகியோருக்கு டெல்லி, அருணாசலப்பிரதேசம், தமிழ்நாடு , கேரளம், தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கான பயிற்சி இன்று நிறைவு பெற்றது. தெலங்கானா மாநில சிறைத்துறைத் தலைவர் ஜித்தேந்தர் தலைமை வகித்தார்.

சிறைத்துறை விருதுகள்
சிறைத்துறை விருதுகள்

இந்த விழாவில் ஜித்தேந்தர் பேசுகையில், “உங்கள் அனைவருக்குத் தெரியும் சிறை நிர்வாகம் என்பது சவால்கள் நிறைந்தது சட்டம் ஒழுங்கை சிறையில் பாதுகாப்பது சவால்கள் நிறைந்தது. நீங்கள் இந்த சவாலைச் சாதாரணமாக ஏற்றுக்கொண்டால் வெற்றி பெறலாம். சிறையில் இருக்கும் அனைவரும் இந்த சமூகத்தினால் குற்றவாளிகளாக பார்க்கப்படுகின்றனர். ஆனால் சிறையிலிருந்து கைதிகள் விடுதலையாகி வெளியில் செல்லும் போது சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்ற வேண்டும்” என்றார். மேலும் பல்வேறு பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு விருதுகளையும் வழங்கினார். சிறந்த ஆல்ரவுண்டராக டெல்லியைச் சேர்ந்த துணை கண்காணிப்பாளர் அனுஜ் தேர்வு செய்யப்பட்டார். இது போன்று 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. டெல்லியை சேர்ந்த மாநில சிறைத்துறை துணைக் கண்காணிப்பாளர் சுர்பி ஹோடா தனக்கு வழங்கப்பட்ட சிறந்த பயிற்சியாளர் விருதை வாங்க மறுத்துவிட்டார். தாம் தான் ஆல்ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும், அதிகாரிகள் செய்தது நியாயமில்லை என மேடையிலேயே அதிகாரிகளிடம் கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அதிகாரிகள் மத்தியில் இது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காவல்துறையில் உயர் அதிகாரிகளுக்கு சேவகம் செய்யும் அதிகாரிகள் மத்தியில், பெண் அதிகாரி ஒருவர் துணிச்சலுடன் செயல்பட்டது பலரையும் வியக்க வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in