தமிழகத்தில் 6 மாவட்டங்களில் சதமடித்த வெயில்!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் சதமடித்த வெயில்!

தமிழ்நாட்டில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. காலை முதலே அதிகப்படியான வெயிலால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல உள்மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் திருச்சி, சேலம், நாமக்கல், மதுரை, கரூர், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் வெயில் 100 ஃபாரன்ஹீட் டிகிரியை இன்று கடந்துள்ளது. அதிபட்சமாக கரூர் மாவட்டத்தில் 40.0 செல்சியஸ் (104 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவாகி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in