துணை தாசில்தார் காலி பணியிடங்கள்; மாவட்ட ஆட்சியரின் உத்தரவு ரத்து... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உயர்நீதிமன்றம் - தமிழ்நாடு அரசு!
உயர்நீதிமன்றம் - தமிழ்நாடு அரசு!

தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து துணை தாசில்தார்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட சீனிவாசன், சுகுமார், ஏழுமலை உள்ளிட்ட 14 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த 2008ம் ஆண்டு ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட தங்களை, சீனியாரிட்டி அடிப்படையில் உதவி தாசில்தார்களாக நியமிக்க வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார். பின்னர் அந்த உத்தரவு மாற்றப்பட்டு மீண்டும் மாவட்ட அளவில் புதிய பட்டியல் தயாரித்து பணிநியமனம் வழங்க உத்தரவிடப்பட்டது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

அதன்படி தயாரிக்கப்பட்ட பட்டியலில் உரிய தகுதிகள் இல்லாதவர்களை 2019-20ல் துணை தாசில்தார்களாக நியமிக்க கிருஷ்ணகிரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பின்னர் 2012 - 22ல் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட தங்களை நிராகரித்துவிட்டு தகுதி இல்லாமல் நியமிக்கப்பட்டவர்களை தாசில்தார்களாக நியமிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். இதுகுறித்து வருவாய் ஆணையருக்கு புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், தங்களை நிராகரித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, பணிநியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில், பணிநியமனம் செய்த போது அனைவரும் உதவியாளர்களாக இருந்ததால் துணை தாசில்தார்களாக நியமிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தார்.

மேலும், தேர்வு வாரியத்தால் பணியில் சேர்ந்தவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் புதிய பட்டியலை தயார் செய்து 4 வாரங்களில் பணி நியமனம் நடைபெற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in