வன்னியர் சங்க கட்டிடம் நிலம் விவகாரம்: அரசு உத்தரவு ரத்து... உரிய சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்!

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்
Updated on
2 min read

பரங்கிமலையில் வன்னியர் சங்க கட்டிடம் செயல்பட்டு வந்த 41,952 சதுர அடி நிலத்தை மீட்பது தொடர்பான உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை கிராமத்தில் உள்ள 41,952 சதுர அடி நிலத்தை தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ள காசிவிஸ்வநாதர் தேவஸ்தானத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த இடத்தில் வன்னியர் சங்கக் கட்டிடம் என்ற பெயரில் கட்டிடம் கட்டப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலத்தில் பல ஆண்டுகளாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கூறி, பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் அறிவிப்புகள் வெளியிட்டும், ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறாததால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் நூறு கோடி ரூபாய்  மதிப்புள்ள, ஒரு ஏக்கர் நிலத்தினை பல்லாவரம் வட்டாட்சியர் மூலம் மீட்ட அரசு, அங்கிருந்த வன்னியர் சங்க கட்டிடத்துக்கு சீல் வைத்தது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வன்னியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், சுமந்தா காமினி என்பவரிடம் இருந்து இந்த நிலத்தை வாங்கியதாகவும், தற்போது அந்த கட்டிடத்தில் உயர் கல்வி படிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் விடுதி செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தில் இருந்து காலி செய்யும்படி அரசு அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும். நிலத்தில் சங்கம் செயல்படுவதில் தலையிடக்கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு, சீல் வைக்கப்பட்ட வன்னியர் சங்க கட்டிடத்தை இடிக்கக்கூடாது எனவும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கில் இன்று இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிலத்துக்கு கன்டோன்மென்ட், தமிழக அரசு, காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகம் ஆகியன உரிமை கோருவதால், நிலத்தை மீட்பது தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்தனர்.

ஏற்கெனவே நிலம் கோயிலுக்கு சொந்தமானது என கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,  உரிய சட்டப்படி நிலத்தை மீட்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in