போலி பிறப்பு சான்றிதழ் விவகாரத்தில் நடிகர் தனுஷூக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

போலி பிறப்பு சான்றிதழ் விவகாரத்தில் நடிகர் தனுஷூக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Silverscreen Inc.

போலி சான்றிதழ் வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரிய வழக்கில் நடிகர் தனுஷ் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை, மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் நடிகர் தனுஷ் தனது மகன் என உரிமை கோரி வருகிறார். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நடிகர் தனுஷ் என் மகன் என அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் 2017-ல் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் தனுஷ் போலி பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்தார். இதற்காக தனுஷ் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். விசாரணையின் போது தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழின் உண்மை தன்மையை அறிய, அந்த சான்றிதழ் மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு இன்னும் வரவில்லை. ஆனால் அதற்கு முன்பு என் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எனவே, போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததற்காக தனுஷ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி நான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக நடிகர் தனுஷ் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in