தமிழகத்துக்கு மார்ச் 9 வரை மிக கனமழை எச்சரிக்கை

தமிழகத்துக்கு மார்ச் 9 வரை மிக கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 270 கி.மீ. தூரத்தில் நீடிக்கிறது என்றும் தமிழகத்துக்கு மார்ச் 9ம் தேதி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு கடலோர பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டையில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், திருச்சி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மார்ச் 8ம் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 270 கி.மீ. தூரத்தில் நீடிக்கிறது. 13 கி.மீ. வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழ்நாட்டின் கரையை 36 மணி நேரத்தில் நெருங்கும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. நாளை கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் தரிக்காற்று பலமாக வீசும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in