தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை... 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை அவசர கடிதம்!

கனமழை
கனமழை

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் சார்பில் அவசர கடிதம் என்பது எழுதப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி இன்று முதல் வரும் 19 ம் தேதி வரை தமிழ்நாட்டின் 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக கனமழை எச்சரிக்கை
மிக கனமழை எச்சரிக்கை

இந்நிலையில் தான் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதன்படி, ‘இன்று முதல் மே 19ம் தேதி தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மழையை சமாளிக்க ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து மழை காரணமாக மக்கள் பாதிக்காத வகையில் தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை துறை தயாராக உள்ளது. ஆனாலும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

கனமழை பாதிப்பால் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் உடனடியாக பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். இதையடுத்து மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். கனமழை எச்சரிக்கையால் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு நடவடிக்கையின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்’என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர். கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்த அவசர கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தேர்வு எழுத அனுமதி மறுப்பு... ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவர் தற்கொலை!

பாடகி சுசித்ராவுக்கு முன்னாள் கணவர் கொடுத்த ரியாக்‌ஷன்... வைரலாகும் வீடியோ!

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்... ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!

ஷாக்... இந்து இளைஞரை திருமணம் செய்த முஸ்லிம் பெண் மீது கொலைவெறி தாக்குதல்!

டெல்லி, ராஜஸ்தானைத் தொடர்ந்து கான்பூரிலும் அதிர்ச்சி... 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in