13 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கன மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

13 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கன மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் , ‘தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், சேலம் ஆகிய 13 மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும் கன மழை பெய்யக்கூடும்.

மேலும், 7 மற்றும் 8-ம் தேதிகளில் பாண்டிச்சேரி, காரைக்கால், தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in