கனமழை; 9 மாவட்டங்களில் வெளுக்கப் போகிறது... வானிலை ஆய்வு மையம் தகவல்!

கனமழை; 9 மாவட்டங்களில் வெளுக்கப் போகிறது... வானிலை ஆய்வு மையம் தகவல்!
Updated on
1 min read

மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு, அதிகாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்வதும், மற்ற நேரங்களில் சுளீர் என வெயில் சுட்டெரிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது.

சென்னை மட்டுமல்ல செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை அதிகாலை முதலே வெளுத்து வாங்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in