தமிழகத்தில் வரும் மூன்று நாட்களுக்கு கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகத்தில் வரும் மூன்று நாட்களுக்கு கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மூன்று நாட்களுக்கும் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ இன்று (அக்டோபர்-8) நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை(அக்டோபர் 9) நீலகிரியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும். ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், கரூர், கோயமுத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அக்டோபர் 10ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அக்டோபர் 11ம் தேதி நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்து வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இன்றுமுதல் 11ம் தேதி வரை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in