
சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதாலும், யானைகளின் நடமாட்டம் இருப்பதாலும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த அருவியில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இன்று அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக சுருளி அருவி பகுதியில் குவிந்தனர்.
கடந்த நான்கு தினங்களாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, யானைகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால், அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதன் காரணமாக சுருளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ள முல்லை பெரியாறு ஆற்றங்கரையோர பகுதிகளில் பலரும் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுத்தனர். முல்லை பெரியாறு ஆற்றங்கரையோரத்தில் குளியலிட்ட பின்பு சுருளி ஆண்டவர், சுருளி வேலப்பர், விபூதி குகை கோவில், ஆதி அண்ணாமலையார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.
மேகமலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதோடு, அப்பகுதியில் யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளதால் வனத்துறையினர் மற்றும் வனக்காவலர்கள் அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!
தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!
ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!
பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!
அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!