வெளியே போகாதீங்க ப்ளீஸ்...  தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களில் வெப்ப அலை வீசும்!

வெளியே போகாதீங்க ப்ளீஸ்... தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களில் வெப்ப அலை வீசும்!

தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகமாக இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில் தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் ஏப்ரல் 26-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை அதிகமாக இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் எனவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in