தொடரும் சோகம்: ஊத்தங்கரையில் அரசுப் பள்ளி மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!

தாத்தாவின் பிரிவைத் தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக்கொண்டாரா?
தொடரும் சோகம்: ஊத்தங்கரையில் அரசுப் பள்ளி மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்த மாணவர் ஒருவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செங்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் 12-ம் வகுப்பில் படித்து வந்தார். அரசின் மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வந்த இவர், கடந்த சில நாட்களாக சோகமாக இருந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு விடுதி அறையில் கேபிள் ஓயரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இன்று காலை மாணவர்கள் அவரது அறையைப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியதைக் கண்டு அலறித் துடித்தனர். இதனையடுத்து விடுதி காப்பாளர் மூலமாக ஊத்தங்கரை போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மாணவருக்குப் பாதுகாப்பாக இருந்து வந்த அவரது தாத்தா, கடந்த சில நாட்களுக்கு முன் மரணமடைந்துவிட்டதால் மாணவர் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்திருக்கிறார். அதனால் இதற்கு முன் இரண்டு முறை அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in