ஜூலை 24-ம் தேதி குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

ஜூலை 24-ம் தேதி குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

"குரூப்-4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும்" என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குரூப்-4-ல் 7,382 பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் இந்த பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 பணியிடங்கள் விளையாட்டுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் குரூப்-4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் கூறினார்.

மேலும் பாலச்சந்திரன் கூறுகையில், "குரூப்-4 தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களின் தரவரிசை வெளியிடப்படும். 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் கலந்தாய்வு நடைபெறும். 2019க்கு முன் தேர்வு மையம் விண்ணப்பதாரர்களால் தேர்வு செய்யப்பட்டு வந்தது. இனிமேல் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதும் மையத்தை டிஎன்பிஎஸ்சியே தேர்வு செய்யும்" என்றார்.

Related Stories

No stories found.