தமிழகத்தில் காலியாக உள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு தீபாவளிக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆன டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்வாகும் அரசுப் பணி என்பதால், இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கக்கூடிய குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு தீபாவளிக்குள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டை விட இந்த ஆண்டு 5000 இடங்கள் அதிகம் இருக்கும் என்பதால் தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் கட் ஆப் மதிப்பெண் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.