கோடை காலத்தை சமாளிக்க முடியுமா? வெளியான ஆறுதல் தகவல்!

நிலத்தடி நீர்
நிலத்தடி நீர்

சென்னையில் கடந்தாண்டை விட ஓரளவு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குடிநீர்
குடிநீர்

நிலத்தடி நீர்மட்டம் குறித்து சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வுக்கான முடிவு நேற்று மாலை வெளியான நிலையில், ஆய்வின் படி சென்னை மாநகரில் தற்போது நிலத்தடி நீர்மட்டம் 4.22 மீட்டர் ஆழத்தில் அதாவது சற்று அதிகரித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து தற்போது வரை நீர்மட்டம் 0.26 மீட்டராக உயர்ந்துள்ளது. அதாவது இந்த இடைப்பட்ட காலத்தில் குறிப்பிட்ட அளவு நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மாதவரம், அம்பத்தூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு நீர்மட்டம் உயர்ந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதேபோல், தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள திரு.வி.க. நகர் பகுதியில் 1.74 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம்
சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம்

மேலும் தேனாம்பேட்டை, ராயபுரம் மற்றும் அடையார் பகுதிகளில் ஓரளவும், பெருங்குடி, சோளிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மிக 3 மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சென்னையில் அண்ணாநகர், ஆலந்தூர் போன்ற பகுதிகளில் கடந்த ஓராண்டாக நிலத்தடி நீர்மட்டம் ஒரு மீட்டர் அளவுக்கு குறைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட பகுதிகளில் நீர்மட்டம் கிட்டத்தட்ட 0.20 மீட்டர் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் சென்னையில் உள்ள 200 இடங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in