
குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பல பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகின்றன.
நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இப்படி ரேஷன்தாரர்களுக்கு மட்டுமல்லாமல், ரேஷன் ஊழியர்களுக்கும் சிறப்பு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் கடை ஊழியர்கள் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். கடையின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும், தரம் குறைந்த அத்தியாசியப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று கூட்டுறவு துறை சார்பில் கடை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்; வங்கக்கடலில் நாளை உருவாகும் 'மிதிலி' புயல்: வானிலை மையம் எச்சரிக்கை!
இயக்குநர் மணிவண்ணன் மரணத்திற்கு இதுதான் காரணமா?: 10 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை!
'இந்த அரண்மனை வாடகைக்கு விடப்படும்': ஜோத்பூர் இளவரசியின் சுயதொழிலால் கரன்சி மழை!
உத்தரப் பிரதேசத்தில் டெல்லி-சஹர்சா வைசாலி அதிவிரைவு ரயிலில் தீவிபத்து... 19 பேர் காயம்