நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்!

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஆளுநர்!

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதாவை 140 நாட்களுக்கு பிறகு தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர். இது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா குயடிரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும்படி, ஆளுநரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்த மசோதா தொடர்பாக, குடியரசுத் தலைவரிடமும், மத்திய அரசிடமும் பாஜகவை தவிர்த்து தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஒரு செய்தியை வாசித்தார். அதில், "நீட் தேர்வில் விலக்கு கேட்கும் மசோதாவை, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். இதனை ஆளுநரின் செயலர், சில நிமிடத்திற்கு முன் தொலைபேசி மூலம் தன்னிடம் தகவல் தெரிவித்தார். நீட் விலக்கு போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்த சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in