4 மாதத்துக்கு பின் நீட் மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி!

4 மாதத்துக்கு பின் நீட் மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி!
முதல்வர் ஸ்டாலினுடன் ஆளுநர் ரவிகோப்பு படம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை பிப்ரவரி 1ம் தேதி அரசுக்கு விளக்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்விற்கு நிரந்தர விலக்கு அளிக்கும் மசோதா சட்டப்பேரவையில் செப்டம்பர் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 4 மாதங்களாக இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனிடையே, நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து தகவல் அளிக்கும் உரிமை சட்டத்தின் கீழ் கல்வியாளர் கஜேந்திர பிரின்ஸ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஆளுநர் மாளிகை அளித்த பதிலில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே இன்று திருப்பி அனுப்பியுள்ளார். திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை பிப்ரவரி 1ஆம் தேதி அரசுக்கு விளக்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in