அரசுப்பள்ளியை மேம்படுத்த ஆளுநர் ரவி ரூ.50 லட்சம் நிதியுதவி!

ஆளுநர்
ஆளுநர்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள அரசுப் பள்ளியை மேம்படுத்த ஆளுநர் ரவி ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் அமைந்துள்ள அரசு பள்ளி ஒன்று சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை அமைத்து தரக்கோரி ஆளுநர் ரவியிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மக்களின் கோரிக்கையை ஏற்று ஆளுநரின் நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தை வழங்கியுள்ளார். இதையடுத்து பள்ளிகளின் தரம் விரைவில் மேம்படுத்தப்படும் என தெரிகிறது. நிதியுதவி அளித்த ஆளுநருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in