புதிய தேசியக்கல்விக் கொள்கையை மீண்டும் உயர்த்திப் பிடித்த தமிழக ஆளுநர்!

புதிய தேசியக்கல்விக் கொள்கையை மீண்டும் உயர்த்திப் பிடித்த தமிழக ஆளுநர்!

"புதிய தேசியக் கல்விக்கொள்கை வந்தால் நாடு வேகமாக வளர்ச்சி பாதைக்கு செல்லும். புதிய கல்விக்கொள்கையை எல்லோரும் படிக்க வேண்டும்" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

புதிய தேசியக் கல்விக்கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. புதிய தேசிய கல்விக்கொள்கை நீட்டை விட கொடுமையானது என தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புதிய கல்விக்கொள்கையை ஆதரித்து தொடர்ந்து பேசி வருகிறார்.

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் இன்று தொடங்கியது. அதிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக பேசினார்.

அவர் பேசுகையில், "புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆட்சியாளர்கள் படித்து உணர வேண்டும். விரைவில் புதிய தேசிய கல்விக் கொள்கை சுமூகமாக நடைமுறைக்கு வரும். கல்விக் கொள்கைகளை அரசியல் ரீதியாக பார்க்கக் கூடாது . நம்முடைய கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் ஆகியவை பல்வேறு அரசாங்கங்களால் ஏற்கனவே மறைக்கப்பட்டது. எனவே, மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டு எடுக்கும் வகையில் புதிய தேசிய கல்விக்கொள்கை அமையும். 74 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் பெரிய மாற்றம் இல்லை. இது ஆங்கிலேயர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட கொள்கை. இதில் சீர்திருத்தத்தை செய்ய வேண்டும்" என்று அவர் பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in