நிர்மலா சீதாராமனை பதவி நீக்க கோரிய ஐஆர்எஸ் அதிகாரி சஸ்பெண்ட்... நாளை ஓய்வு பெறும் நிலையில் நடவடிக்கை!

ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன்
ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன்
Updated on
2 min read

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதிய ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகன் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அமலாக்கத்துறை சார்பில் சேலம் விவசாயிகளான கிருஷ்ணன், கண்ணன் ஆகியோருக்கு கடந்த ஜூலை மாதம் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இருவர் மீதும் வனத்துறை சார்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், 6 மாதம் கழித்து கடந்த 3-ம் தேதி இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், பெரும் சர்ச்சை எழுந்தது. இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஜிஎஸ்டி துணை ஆணையரும், ஐஆர்எஸ் அதிகாரியுமான பாலமுருகன் கடிதம் எழுதியிருந்தார்.

ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன்
ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன்

அந்த கடிதத்தில், சம்மன் அனுப்பப்பட்ட இரு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 450 ரூபாய் மட்டுமே இருப்பு உள்ளது. இரு விவசாயிகளும் அரசு சார்பில் வழங்கப்படும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷனில் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வருகின்றனர். பாஜக பிரமுகருக்கும், சம்பந்தப்பட இரு விவசாயிகளுக்கும் இடையே நிலப்பிரச்சினை உள்ள நிலையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பபட்டுள்ளது.

சாதியைக் குறிப்பிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அப்போது பெரும் விவாதமாக மாறிய இந்த விவகாரத்தில், விவசாயிகளுக்கு அனுப்பப்பட்ட சம்மனை அமலாக்கத்துறை ரத்து செய்தது. இந்நிலையில், ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகன் நாளை ஓய்வு பெற இருந்தார். இந்த சூழலில் அவரை பணியிடை நீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாலமுருகன் சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கெனவே கடந்த 2020-ம் ஆண்டு ஜிஎஸ்டி ஆணையத்தின் இந்தி பிரிவில் பணியாற்றிய போது, இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதேபோல், கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பெரும் காலத்தின் மனசாட்சி... மகாத்மா காந்திக்கு கமல்ஹாசன் புகழாரம்!

குட்நியூஸ்... 6,244 காலிப்பணியிடங்களை நிரப்ப ஜூன் 9-ல் குரூப் 4 தேர்வு!

யாருடன் கூட்டணி?... இன்று முடிவு செய்கிறது பாமக!

'நயினார் நாகேந்திரனுக்கு எம்.பி சீட் கொடுத்தால்?'...பாஜகவை எச்சரிக்கும் போஸ்டரால் பரபரப்பு!

மறக்க மனம் கூடுதில்லையே... காதலியின் நினைவு நாளில் தற்கொலை செய்த காதலன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in