
தொழில் நிறுவனங்களுக்கு அனைத்து அனுமதிகளும் ஒன்றை சாளர முறையில் பெறுவதற்கான கட்டணத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஒரு நிறுவனம் ரூ.10 கோடி மதிப்பு வரையில் விரிவாக்கம் செய்வதற்கு கட்டணம் எதுவும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. அதில் முக்கிய அம்சமாக ஒன்றை சாளர முறையில் தொழில் நிறுவனங்களுக்கு அனைத்து அனுமதிகளும் பெரும் வசதிகளை அரசு ஏற்படுத்தியுள்ளது. அதற்கான கட்டணம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை சார்பாக நிறுவனங்களின் முதலீடுகளுக்கு ஏற்ப கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் அனைத்து அனுமதிகளையும் பெற தனித்தனி துறைகளை அணுகி கட்டணம் செலுத்தாமல் ஒன்றை சாளர முறையில் அனுமதி பெரும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் ரூ.10 கோடி மதிப்பு வரை விரிவாக்கம் செய்வதற்கு கட்டணம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை விரிவாக்கம் செய்தால் ரூ.2.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரை விரிவாக்கம் செய்தால் ரூ.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் ரூ.100 கோடி முதல் ரூ.300 கோடி வரை விரிவாக்கம் செய்தால் ரூ.10 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் ரூ.300 கோடி முதல் ரூ.1000 கோடி வரை விரிவாக்கம் செய்தால் ரூ.15 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் 1000 கோடிக்கு மேல் விரிவாக்கம் செய்தால் ரூ.20 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.