ரூ.2 லட்சம் சம்பளம்… விண்ணப்பிக்க டிசம்பர் 8ம்தேதி கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி தேர்வு
டிஎன்பிஎஸ்சி தேர்வு
Updated on
1 min read

தமிழக அரசு கருவூலங்கள் மற்றும் கணக்கு பணிகளுக்கான 163 காலி பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 8ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசின் கருவூலங்கள் மற்றும் கணக்கு பணிகள் உள்ளிட்ட 5 நிறுவனங்களில் மொத்தம் 163 காலி பணியிடங்கள் உள்ளன. அதில், 52 கணக்கு அலுவலர் நிலை 3, கணக்கு அலுவலர், மேலாளர் நிலை 111, முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு CA அல்லது ICWA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் 37 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வேறு அரசு பணியில் உள்ளவர்கள் 37 வயதுக்கு கீழ், முறையான கல்வித்தகுதியுடன் இருந்தால் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் ரூ.150. எழுத்து தேர்வுக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டும். சம்பளம் 60 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 8ம் தேதிக்குள் www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையம் வழியாக வரும் விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்படும் என்றும், நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

‘ஜெயிலர் 2’ - மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி!

பதற்றம்! சிப்காட்டுக்கு எதிராக போராட்டம்; விவசாயிகள் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

ஷமி மீது கேஸ் போட மாட்டீங்கள்ல? மும்பை போலீஸை ஜாலியாக வம்பிழுத்த டெல்லி போலீஸ்!

வாட்ஸ் அப் வழங்கும் கசப்பான புத்தாண்டு ‘பரிசு’... அன்லிமிடெட் சாட் பேக்கப்புக்கு செக்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in