அலுவலகத்தில் செல்போன் பயன்படுத்த தடை: அரசு ஊழியர்களுக்கு `செக்'

அலுவலகத்தில் செல்போன் பயன்படுத்த தடை: அரசு ஊழியர்களுக்கு `செக்'

"அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது" என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

திருச்சி சுகாதாரத்துறை பணிமனை கண்காணிப்பாளராக பணியாற்றிய வரும் ராதிகா என்பவர், சக ஊழியர்களை தன் செல்போனில் வீடியோ எடுத்ததால் பணியிட நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ராதிகா மனுத் தாககல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அலுவலக நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதும், வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல என்றும் அரசு ஊழியர்களின் இதுபோன்ற செயல்பாடுகளை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்றும் ஒருவேளை ஏதேனும் அவசரம் எனில் முறையான அனுமதி பெற்று செல்போனை பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும், அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக அரசு ஊழியர் விதிப்படி நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று கூறிய நீதிபதி, தமிழக சுகாதாரத்துறைச் செயலர் இந்த உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள்ளாக இந்த உத்தரவை நடைமுறைப் படுத்தவேண்டும் என ஆணையிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in