
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கான முன் பதிவு இன்று தொடங்கியது.
பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை காலங்களில் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு அதிக அளவில் மக்கள் திரும்பிச் செல்வது வழக்கம். அவர்களின் வசதிக்காக வழக்கமான பேருந்துகளை தவிர அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அதேபோல் தெற்கு ரயில்வே சார்பிலும் அண்மைக்காலமாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. சிறப்பு ரயில்கள், பேருந்துகளுக்கான முன்பதிவுகள் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தெற்கு ரயில்வே சுமார் 4 மாதங்களுக்கு முன்பாக ஜூலை மாதமே முன்பதிவை தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து இருக்கைகளும் நிரம்பின.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் தீபாவளி பண்டிகை கால அரசு விரைவு பேருந்துகளின் முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இந்த தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 30 நாட்களுக்கு முன் இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு நடைபெறும் நிலையில் நவம்பர் 10ம் தேதி பயணம் செய்ய விரும்பும் பயணிகள் இன்று முன்பதிவு செய்யலாம். நவம்பர் 11ம் தேதி பயணிக்க உள்ளவர்கள் நாளை முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!