ஒரு சவரன் 38,504 ரூபாய்: மீண்டும் எகிறியது தங்கம் விலை

ஒரு சவரன் 38,504 ரூபாய்: மீண்டும் எகிறியது தங்கம் விலை

சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்து. இந்த திடீர் விலையேற்றம் நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

ரஷ்யா- உக்ரைனில் நடந்து வரும் போர் தங்கம், வெள்ளி விலையையும் விட்டுவைக்கவில்லை. கடந்த சில மாதமாக ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. சில சமயங்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இதனால், நகை வாங்குவோர் இடையே ஒரு குழப்பமான நிலை இருந்து வந்தது. கடந்த 2ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.36,192க்கு விற்கப்பட்டது. இதன் விலையேற்றம் 11ம் தேதி வரை தொடர்ந்தது. 12ம் தேதி தங்கம் சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வந்தது.

கடந்த 24ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 வரை உயர்ந்தது. இதன் பின்னர் 25, 26 ஆகிய தேதிகளில் தங்கம் விலை சவரனுக்கு 1200 வரை சரிந்தது. ஞாயிறு விடுமுறை என்பதால் இன்று வாரத்தின் முதல் நாளில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.38,504க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.4,813க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.10 உயர்ந்து ரூ.70.10க்கு விற்பனையாகிறது. இந்த திடீர் விலையேற்றம் நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in