தங்கம் விலை இன்று திடீர் சரிவு: ஒரு சவரன் ரூ.40,000க்கு கீழ் குறைந்தது

தங்கம் விலை இன்று திடீர் சரிவு: ஒரு சவரன் ரூ.40,000க்கு கீழ் குறைந்தது

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. ஒரு சவரன் 40 ஆயிரத்தை தாண்டியதால் திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக சரிவை கண்டிருப்பது இல்லத்தரசிகளை சற்று ஆறுதல் அடையவைத்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 110 ரூபாய் குறைந்து ரூ.4,910க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் ரூ.880 குறைந்து ரூ.39,280க்கு விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,309 எனவும் ஒரு சவரன் ரூ.42,472 எனவும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 260 காசுகள் குறைந்து ரூ.74.10 எனவும், ஒரு கிலோ விலை ரூ.74,100 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in