தங்கம் விலை திடீர் சரிவு!- மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

தங்கம் விலை திடீர் சரிவு!- மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ஒரு பவுன் 37,496 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களை சற்று மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

தங்கம் விலை கடந்த 4 மாதத்திற்கும் மேலாக அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. சில நேரத்தில் தொடர்ந்து அதிரடியாக விலை உயர்வதுமான போக்கும் நிலவியது. சென்னையில் நேற்று முன்தினம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,715 ஆக ரூபாயாக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 24 ரூபாய் அதிகரித்து 37,720 ரூபாய்க்கு விற்பனையானது. அதே போல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசு உயர்ந்து ரூ.67.40க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி 67,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.5,076-க்கு விற்பனை செய்யப்பட்டது. 8 கிராம் தங்கம் ரூ.40,608-க்கு விற்பனையானது.

இந்நிலையில், தங்கம் விலை குறைந்துள்ளது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.37,496க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.4,687க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.68.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in