தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு... இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு... இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

கடந்த சில நாட்களாக பெரிதாக மாற்றம் இல்லாமல் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே பெண்கள் தங்கத்தின் மீது பெரியளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எவ்வளவு விலை உயர்ந்தாலும் தங்கத்திற்குரிய மவுசு சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஒரேடியாக ஏறுவதும், இறங்கும் போது  கொஞ்சம் கொஞ்சமாக குறைவதும் தங்கத்தின் விலை நிலவரமாக இருந்து வருகிறது. ஒரு நாளைக்கு ரூபாய் 700 வரையில் முன்னர் ஏறிய தங்கத்தின் விலை, தற்போது சிறிய அளவில் குறைந்து வருகிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் பெரிதாக ஏற்றம் இல்லை. ஒரு சீரான நிலைமையில் இருந்து வந்தது.  கிராமுக்கு  பத்து ரூபாய் உயர்வு அல்லது வீழ்ச்சி என்று இருந்து வந்தது.

சென்னையில் நேற்று தங்கத்தின் விலை ஒரு கிராம்  5830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் விலை ரூ.46,640 ஆக இருந்தது.  இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்றைவிட  ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 46,480 ரூபாயாக உள்ளது. கிராமுக்கு இருபது ரூபாய் குறைந்து 5810 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையில் நல்ல சரிவு ஏற்பட்டு இருப்பதால் தங்கம் வாங்குவோர் தற்போது தாராளமாக வாங்கலாம்.

அதே நேரத்தில் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி கிராம் 77 ரூபாய்க்கும், கிலோ 77 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in