ரூ.40 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை!

ரூ.40 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக எகிறி வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.776 உயர்ந்து ஒரு பவுன் ரூ.39,760க்கு விற்பனையாகிறது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் ஒரு டாலர் 116ஐ தாண்டிவிட்டது. இதற்கு போட்டியாக தங்கம் விலையும் எகிறி வருகிறது. தங்கம் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.776 உயர்ந்து ரூ.39,760க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.97 உயர்ந்து ரூ.4,970க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு சவரன் 40 ஆயிரத்தை நெருங்குவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 90 காசு உயர்ந்து ரூ.73.40க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in