தங்கம் விலை குறைந்தது!- வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலை குறைந்தது!- வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

தங்கத்தின் விலை இந்த வாரத்தில் 3வது நாளாக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 37,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் 3 நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று முன்தினம் குறைந்து காணப்பட்ட தங்கம், நேற்று மீண்டும் உயர்ந்தது. இந்நிலையில், 3வது நாளான இன்று தங்கம் விலை குறைந்தது. அதே நேரத்தில், வெள்ளியின் விலை அதிகரித்தது. தங்கம் இன்று விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 4,735 ஆக ரூபாயாக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 120 ரூபாய் குறைந்து 37,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 30 காசு குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 69,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in