தேவரின் கொள்கைகள் காலத்தால் அழியாதது... பிரதமர் மோடி புகழாரம்!

தேவரின் கொள்கைகள் காலத்தால் அழியாதது... பிரதமர் மோடி புகழாரம்!

முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் நடைபெறுகிறது. இதற்கு பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டு மரியாதை செலுத்தியுள்ளார்.

எக்ஸ் சமூக வலைதளத்தில் முத்துராமலிங்க தேவருக்கு புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் மோடி, "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புனித குருபூஜையை முன்னிட்டு அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம். சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும்பணிகள், விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மீகப் பாதை, தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒளியேற்றுகிறது. காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும்" என எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பசும்பொன்னில் மரியாதை செலுத்தினார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in